கடலூரில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் அமர்நாத் கண்டனம்
கொரானா
தொற்றுநோய் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் நாடே தொடர் முடக்கஉத்தரவால் அனைத்து பகுதி மக்களும் கடுமையான இன்னலை சந்திக்கக் கூடிய சூழ்நிலையில்கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ளமாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலையில் சில விஷமிகள் செருப்பை கையில் மாட்டி சென்றுள்ளனர் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது
இந்த நடவடிக்கை திட்டமிட்டு செய்யபட்டதாக தெரிய வருகிறது சிலைக்கு அருகில் உள்ள கடைகளில் உள்ள கேமராக்களை கவனித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளங்காண வேண்டும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்