செங்கம் அருகே வேளாண் விளைநிலங்களில் மாவட்ட வேளாண்துறை சார்பில் மண் பரிசோதனைக்காக மண் எடுத்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்கள்.....
செங்கம், மே 03 _ திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு கிராமத்தில் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் 2020-21 ஆண்டுக்கான மண்வள திட்டம், செயல் விளக்கம் மண் மாதிரி சேகரித்தல் பரிசோதனை ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த மண் மாதிரி பரிசோதனை பணியில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன், துணை வேளாண்மை அலுவலர் ஜெயசீலன், வேளாண்மை அலுவலர் பிரதீபா, பயிர் காப்பீட்டு அலுவலர் வசந்த்குமார் ஆகியோர் பங்கேற்று மண் பரிசோதனை மற்றும் செயல்விளக்கம் போன்றவைகளை பங்கேற்ற கிராம விவசாயிகளுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து பாதுகாப்புடன் மண் பரிசோதனைக்காக மண் எடுத்து செயல் விளக்கம் செய்து காட்டினார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073