திருப்பூர் காதர் பேட்டை மொத்த துணி கடைகள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
திருப்பூர் காதர் பேட்டை பகுதி இந்திய அளவிலான உள்நாட்டு பனியன் ஜவுளி விற்பனை நடைபெறும் பகுதியாக உள்ளது. இங்கு தினமும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா கர்நாடகா ஆந்திரா டெல்லி உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும் பின்னலாடை பனியன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது தினசரி பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும். ஆண்டுக்கு 18 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றுவது இப்பகுதியின் வர்த்தகமே. மார்ச் மாதம் 24ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரூம் நிலையில் இப்பகுதியில் காம்ப்ளக்ஸ் கடைகள் தவிர்த்த தனிக்கடைகளை சிலர் மட்டும் திறந்துள்ளனர். முன்னதாக பெறப்பட்ட ஆர்டர்கள் பண்டல்களாக பேக் செய்யப்பட்டு தயார் படுத்தப்பட்டு வருகிறது. மீண்டும் சரக்கு போக்குவரத்து துவங்கியவுடன் அனுப்பும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் ஊரடங்கு முடிவடைந்ததும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.