செங்கம் பகுதியில் கணவன் மனைவிக்கு கொரானா தொற்று உறுதி பொதுமக்கள் அச்சம்...
செங்கம், மே,17- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி இருவருக்கும் கொரானா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சில தினங்களுக்கு முன் சென்னை நெற்குன்றம் பகுதியில் இருந்து சொந்த ஊரான சென்னசமுத்திரம் பகுதிக்கு வந்தனர் பின்னர் அப்பகுதி மக்கள் மருத்துவ குழுவிற்கு தகவல் தெரிவித்ததையடுத்து இருவரையும் செங்கம் பேருந்து நிலையம் அருகே சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ள அரசு மாணவர் விடுதியில் தனிமை படுத்தப்பட்டு கொரானா தோற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது நேற்று பரிசோதனை முடிவில் இருவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் திருவண்ணாமலை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
செங்கம் பகுதியில் முன்னதாக 3 நபருக்கு கொரானா தோற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் மேலும் இருவருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது
செங்கம் பகுதியில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்த நிலையில் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக பரவல் ஏற்படாமல் இருக்க சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சென்று மீண்டும் சொந்த ஊருக்கு வருபவர்கள் மருத்துவ சோதனை செய்த பின் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073