போடி பகுதியில் காட்டெருமை தாக்கி கூலி தொழிலாளி பலி


 


 


தேனி மாவட்டம் போடி அருகே கேரளா எல்லைப் பகுதியில் மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள கொழுக்குமலை எஸ்டேட்டில் சங்கரன்கோவில் அருகே உள்ள குஞ்சாம் பட்டியைச் சேர்ந்த லட்சுமணபாண்டி (46) மற்றும் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்த சேகர் (52) ஆகியோர் கூலித் தொழிலாளி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக குரங்கணி பகுதிக்கு வந்தனர். பொருட்களை வாங்கிய பின்னர் இவர்கள் மறுபடியும் எஸ்டேட்பகுதிக்கு நடந்து சென்றனர். அப்போது குரங்கணி அருகே உள்ள ஒத்தமரம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த காட்டெருமை இவர்களை முட்டி தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த லட்சுமணபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயங்களுடன் உயிர் பிழைத்த சேகர் அங்கிருந்து தப்பிச் சென்று குரங்கணி பகுதியிலுள்ள பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் டோலி மூலம் லட்சுமணபாண்டி உடலை மீட்டு கொண்டு வந்தனர். லேசான காயங்களுடன் தப்பித்த சேகருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டு எருமை முட்டி கூலித்தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட செய்திகளுக்காக க.சின்னதாஸ்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image