திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
செங்கத்தை அடுத்துள்ள நரிக்குறவர் காலனியில் புதியதாக 90 வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கான நிதி வழங்கப்படாமல் அழிக்கப்பட்டதால் வீடு கட்டும் பணி தாமதமானது தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு நரிக்குறவர் மக்கள் புகார் தெரிவித்த நிலையில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வீடு கட்டுவதற்கான நிதியை உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த பணிகளை வரும் மழைக் காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு நரிக்குறவர் மக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார் உடன் செங்கம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணிகுமார் உடன் இருந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் சி.அரிகிருஷ்ணன்