திண்டுக்கல் அமிர்தா கல்வி நிறுவனங்கள் சார்பாக அமிர்தா கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு கல்லூரி தாளாளர் ஜி. ஆர். சபரி நிவாரணம் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் செட்டியப்பட்டி ஊராட்சியில் செயல்படும் அமிர்தா கல்வி நிறுவனங்கள் சார்பாக அமிர்தா நர்சிங் கல்லூரி , அமிர்தா தொழில் பள்ளி , அமிர்தா கேட்டரிங் மேனேஜ்மென்ட் , அமிர்தா பேஷன் டிசைனிங் மற்றும் ஹெல்த் கேர் உள்ளிட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு சுற்றுப்புற கிராமங்களான செம்பட்டி , ஆத்தூர் , பாளையங்கோட்டை , சித்தையன்கோட்டை , எஸ். பாறைப்பட்டி , சின்னாளப்பட்டி , கன்னிவாடி , மதுரை - வாடிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமப்புற ஏழை மாணவர்கள் தான் அதிகளவில் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மாணவ , மாணவியர்களின் பெற்றோர்கள் யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டனர். இதை அறிந்த அமிர்தா கல்லூரியின் தாளாளர் ஜி .ஆர். சபரி தனது கல்லூரியில் பயிலும் ஏழை மாணவ , மாணவர்களின் குடும்ப நலன் கருதி அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அரிசி , பருப்பு , மளிகை சாமான்கள் உட்பட நிவாரணப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார். இதற்கு அமிர்தா கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவ , மாணவியர்களின் பெற்றோர்கள் நன்றியையும் , பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலரும் , அமிர்தா கல்லூரி தாளாளருமான ஜி .ஆர். சபரி செய்தியாளரிடம் பேசுகையில் எங்கள் கல்லூரியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ , மாணவியர்கள் தான் அதிக அளவில் படித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களாக 200க்கும் மேற்பட்ட மாணவ , மாணவியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறோம் . மேலும் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு சென்று முக கவசம் , கபசுரகுடிநீர் ஆகியவை வழங்கி வருகிறோம் என்றார்.மாவட்ட நிருபர்: பி.இப்ராகிம்கான் திண்டுக்கல் செல் : 98421 61786
திண்டுக்கல்