ஆட்சியில் இருப்பது அதிமுகவின் ஆட்சியா அல்லது கழக தலைவர் தளபதி ஆட்சியா என்ற ஐயம் மக்களிடம் ஏற்பட்டுள்ளதாக
'ஒன்றிணைவோம் வா" அலைபேசி எண்ணிற்கு வந்த கோரிக்கை மனுக்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த பின் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் பேட்டி.
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினரும் வருமானமின்றி தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர். திமுக தலைவர் தளபதி ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் தொலைபேசி எண்ணை அறிவித்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை பற்றி ஆளும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் "ஒன்றிணைவோம் வா" அலைபேசி எண்ணிற்கு வந்த கோரிக்கை மனுக்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினருகளும் இணைந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கழக செயலாளர் பூண்டி.கலைவாணன் தெரிவித்ததாவது...
கொரானா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற திமுக தலைவர் தளபதி ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பசி இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் உணவு, காய்கறிகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் பாட்டில்கள் ஓவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. திமுக சார்பில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கொரானா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த அடித்தட்டு மக்களின் நிலையை உணர்த்துவதற்காக கடந்த இரண்டு நாட்களாக ஒன்றிணைவோம் வா மூலம் அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு அழைத்த மக்களின் கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளோம். இதை உடனடியாக பரிசீலித்து ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். தற்போது ஆட்சியில் இருப்பது அதிமுகவின் ஆட்சியா அல்லது கழக தலைவர் தளபதி ஆட்சியா என்ற ஐயம் மக்களிடம் ஏற்படும் வகையில் திமுகவினர் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர் என்றார்.
இந்த நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர்கள் சேகர் என்கிற கலியபெருமாள் மற்றும் பாலச்சந்தர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.பாலா