தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளை சார்பாக நிவாரண பொருட்கள் வழங்குதல்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளை சார்பாக நிவாரண பொருட்கள் வழங்குதல்..


கொரானா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்க கூடிய இந்த வேலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு நிலவுகிறது. தமிழகத்திலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு நிலவுவதால் ஏழை எளிய மக்கள் துயர் துடைத்திடும் விதமாக பல்வேறு தன்னார்வலர்கள் பல்வேறு விதமான உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் தோறும் சுற்றி உள்ள கிராமங்களில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களை கண்டறிந்து உணவுப்பொருட்கள் மளிகை பொருட்கள், உணவு சமைத்துக் கொடுத்தல்,பொருளாதார உதவி கொடுத்தல் போன்ற எண்ணற்ற மனிதநேய சேவைகளை செய்து கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருவாரூர் வடக்கு மாவட்டம் *அத்திக்கடை கிளை* சார்பாக திட்டாணிமுட்டம் என்ற கிராமத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களை கண்டறிந்து சுமார் 15,000 மதிப்புடைய மளிகை பொருட்கள் அங்கு இருக்கக்கூடிய 25 ஏழை குடும்பங்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திற்கு சென்று வினியோகம் செய்யப்பட்டது. இதில் அத்திகடை கிளை தலைவர் இப்ராஹிம் செயலாளர் பைசல் மாணவரணி செயலாளர் அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.


நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட திட்டாணிமுட்டம் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்தனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார கிளைகள் சார்பாக மட்டும் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 21 லட்சம் மதிப்பிலான கொரானா நிவாரணங்கள் மளிகை பொருட்களாகவும், உணவு சமைத்தல் கொடுத்தல் மூலமாகவும், உதவித்தொகைகள் கொடுத்தல் மூலமாகவும்  சுமார் 6,750 குடும்பங்கள் பயன் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image