மாஸ்க், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை.
திருப்பூர் மாநகர் பகுதியில் தற்பொழுது ஊரடங்கு தளர்வு காரணமாக ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும் ஹெல்மெட் அணியாமல் சென்று வருகின்றனர் இதனை தடுக்கும் விதமாக புஷ்பா ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் மாஸ்க் அணியாமலும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர் மீண்டும் இதே போல சுற்றி திரிந்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப் படுவது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.