திருப்பூரில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கும் ஊராட்சி மன்ற தலைவர்...
தினமும் ஐநூறு முதல் ஆயிரம் பேர் உண்டு மகிழ்கின்றனர்...
கொரோனா வைரஸ் காரணமாக தொடர் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் திருப்பூர் மாவட்ட படியூர் பகுதியில் கடந்த 17 நாட்களாக அங்கு வசிக்கும் வெளி மாநில மற்றும் மாவட்ட மக்கள் வேலையின்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் கஸ்டப்படுவதை அறிந்த அந்த படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா முத்துராமன் அங்குள்ள கஷ்டப்படும் மக்களுக்கு தினமும் உணவு வழங்க தொடங்கினர். இந்த நிலையில் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து மதியம் 12 முதல் மாலை 4 மணி வரை வரும் அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அங்கு வரும் மக்கள் உள்ளே வரும் போது சோப்பு மூலம் கைகழுவ வைத்தபின்னர் தான் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் முதலில் கபசூரனம் குடி நீர் குடித்தபின்னர்தான் உணவு அறுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.