திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏழை , எளிய மக்களுக்கு ஒன்றிய செயலாளர் ஆர். லோகநாதன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏ.பி. நகர். மற்றும் எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை , எளிய மக்கள் 150 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஆர். லோகநாதன் வழங்கினார்.