திருப்பூர் அருகே தாராபுரத்தில் உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு.

திருப்பூர் அருகே தாராபுரத்தில் உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு.


 


 


 


மாவட்ட ஆட்சியர் விதிகளுக்கு உட்பட்டுபரிசீலிப்பதாகவும், பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக விவசாயி பேட்டி - திருப்பூரை அடுத்த  தாராபுரம்,குண்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைக்கும்பணியைமத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனத்தினர் மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் அருகே  குழந்தைபாளையம் கிராமத்தில் விவசாயி சம்பத்குமார் விவசாய நிலத்தின் வழியே உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில்தனது நிலத்தில் அமைக்க உள்ள உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட  விவசாயி சம்பத்குமார் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி  அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காததால்  பாதிக்கப்பட்ட விவசாயி சம்பத்குமார் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் சந்தை மதிப்பில் இழப்பீடு கோரி கடந்த 18ஆம் தேதி தனது விவசாய நிலத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கினார், நமது விவசாய தோட்டத்தில் பந்தல் அமைத்து குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டார் ,இரண்டாவது நாளான நேற்று  குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி  சம்பத்குமார் உள்ளிட்ட விவசாயிகளை மத்திய அரசின் பவர்கிரிட் அதிகாரிகள்,  வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர், அதனைத்தொடர்ந்து விவசாயி தங்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி பெற்று தருவதாக  உறுதி அளித்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு கலைந்து சென்றனர், அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட ஆட்சியரை பாதிக்கப்பட்ட விவசாயி சம்பத் குமார் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார், பின்னர் விவசாயி சம்பத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட ஆட்சியருக்கு சார் ஆட்சியர் இருக்கும் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கக்கோரி கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி பதிவு தபால் மூலம் மனு கொடுத்துள்ளதாகவும் அதற்கு எந்தவிதமான பதிலும் தெரிவிக்காததால் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தியதை அடுத்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள   தனது விவசாய நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை மாவட்ட ஆட்சியர் விதிகளுக்கு உட்பட்டுபரிசீலிப்பதாகவும், பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக   செய்தியாளர்களிடம் உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்தார். பேட்டி:- சம்பத்குமார் (பாதிக்கப்பட்ட விவசாயி)


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image