செங்கம் அருகே கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது போலீசில் புகார் அளித்த விவசாய பெண்ணுக்கு கத்தி வெட்டு கள்ளச்சாராயம் விற்றவர்கள் தலைமறைவு போலீஸ் தேடுதல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தாழையூத்து அருகே உள்ள பொன்னிதண்டா கிராமத்தை சேர்ந்த ராஜரத்தினம் மனைவி கம்சலா (வயது.37) என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் அதே பகுதியை சேர்ந்த குப்பன், முருகேசன், அன்பு என்பவர்கள் கள்ளச்சாராயம் விற்று வருவதாக செங்கம் காவல்துறையினருக்கு புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த கள்ளச்சாராயம் விற்பனையாளர்கள் கம்சலா என்பவரை கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதால் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு வெட்டுக்காயங்களுடன் வந்த கம்சலா என்பவருக்கு 11 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செங்கம் காவல்துறையினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்பனையாளர்களை தேடி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ.,