சிவேனா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மசூதிகளில் உள்ளகூம்பு வடிவஒலிபெருக்கிகளை அகற்ற கோரிக்கை

சிவசேனா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என விரைவு தபால் மூலமான தமிழக உள்துறை செயலர்,தமிழக காவல்துறை இயக்குனர், சென்னை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. சிவசேனா கட்சி இளைஞரணி மாநில துணைத் தலைவர் அட்சயா A திருமுருக தினேஷ் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது நமது நாட்டில் தமழ்நாடு உட்பட பல ஆலயங்களிலும் எல்லா மசூதிகளிலும் ஒலிபெருக்கி உபயோகித்து ஸ்லோகங்கள் மற்றும் குர்ஆன் ஓதுதல் நடைபெறுகிறது. ஆலயங்களில் பொதுவாக விழாக்காலங்களில் மற்றும் காலை/மாலை, தேவைப்பட்டால் உபயோகிக்கிறார்கள். ஆனால் மசூதிகளில் ஒவ்வொரு தொழுகைக்கும் ஆட்களை அழைப்பதற்கு பாங்கு உபயோகித்து அழைப்பு விடுக்கிறார்கள். குர்ஆன் ஓத பாங்கு உபயோகிக்க வேண்டும் என்று எவ்விடத்திலும் கூறப்படவில்லை. அப்படி இருக்க அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் அவர்களின் அடிப்படை உரிமை பாதிக்கும் வகையில் ஒரு நாளில் பலமுறை மசூதியின் மூலம் பாங்கு ஓதுதல் அதை சுற்றி குடியிருக்கும் பொதுமக்களுக்கு இடையூறு பிறப்பிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறிருக்க, மாண்புமிகு அலாகாபாத் உயர்நீதிமன்றம் தனது மே 15, 2020 தீர்ப்பின்படி (PIL No.570/2020) பாங்கு ஓதுவது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் ஆதலால் அவர்கள் ஒலிபெருக்கி இல்லாமல் நமாஸ் ஓதிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தது. இதே போல் இதற்கு சென்னை,மதுரை உயர்நீதிமன்றங்கள் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகையால், தமிழ்நாட்டிலும் அதை செயல்படுத்த ஏற்கனவே ஒரு தீர்ப்பு உள்ள நிலையில் மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் நமாஸ் படிக்க அழைப்பு விடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதை மீறினால் தண்டனைக்குள்ளாகவும் போதிய சட்டம் இயற்றுமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறது


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image