வீட்டின் உரிமையாளர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வேண்டு கோள் 

 


 வீட்டின் உரிமையாளர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வேண்டு கோள்


*இது குறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் ஷாஜகான்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .*


கரூர் மாவட்டம், மூக்கனாகுறிச்சி என்கிற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் கட்டட தொழிலாளியான நாகராஜன் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மணைவியுடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது . மேலும்  கடந்த ஒன்றரை மாதங்கள் வேலை இல்லாதனால் வீட்டின் வாடகை கொடுக்க முடியாத சூழலில் உள்ளனர் இதனால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து வற்புறுத்தல் காரணமாக நாகராஜன் தனது மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் வீட்டு பொருட்களுடன் வீட்டை வீட்டு வெளியேறினார் .வீட்டு வாடகை கொடுக்க முடியாத தாள் வீட்டை விட்டு வெளியேற்ற பட்ட நாகராஜன் தனது மணைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தங்குவதற்கு வேறு இடம் இல்லாத காரணத்தால் வெள்ளியணை செல்லும் சாலை ஓரத்தில் தங்கினார்கள் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது . மேலும்  கொஞ்சம் கூட ஈவ்வறக்கம் இல்லாமல் நடந்து கொண்ட வீட்டின் உரிமையாளரை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது . 


கொரோனா தடுப்பு காரணமாக ஊரடங்கும் உத்தரவினால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வருமானம் இல்லாமல்  கடுமையான பொருளாதாரம் நெருக்கடியிலும் பெரும் அளவில் வாழ்வாதாரம் பாதிக்க பட்டு இருக்கும் இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூல் செய்வதும் வாடகை கொடுக்க முடியவில்லை ஏன்றால் வீட்டை காலி செய்யும் மாறு வற்புறுத்தல் செய்வது மனித நேய மற்ற செயலாகும் . 


 ஊரடங்கும் உத்தரவுனால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள்  வாடகையினால் பாதிக்க பட்டு விட கூடாது என்கிற நல்ல என்னத்தோடு வீட்டின் உரிமையாளர்கள் இரண்டு மாதம் வாடகை வசூலிக்க கூடாது எனவும் மீறி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க படும் என மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். ஆனால் இதனை பொற்படுத்தாமல் வீட்டின் உரிமையாளர்கள் இன்று வரையிலும் வாடகை வசூல் செய்து வருகிறார்கள் . மேலும் இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் சிறப்பு கவணம் செலுத்தி தகுந்த  நடவடிக்கையை உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது  .


எனவே : கட்டட தொழிலாளி நாக ராஜன் வசித்துள்ள  அவ்வீட்டின் உரிமையாளர் மீது எந்தவித பாரபட்சம் பாராமல் சட்ட படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மன ரீதியாக பாதிக்க பட்டுள்ள நாக ராஜனுக்கு அவ்வீட்டின் உரிமையாளர் ரூ 2 லட்சம் நஷ்டேடு வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீட்டின் உரிமையாளர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில பொது செயலாளர் ஷாஜகான்  கூறியுள்ளார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image