சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலபாக்கத்தில் வணிகர் சங்கம் சார்பில் கொரானா நலதிட்ட உதவிகள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்புச் செயலாளர் மற்றும் சித்தாலப்பாக்கம் வட்டார அணைத்து வணிகர்கள் நல சங்க பொதுச்செயலாளர் ஆர்.மாதவன் அவர்களின் தலைமையில், தலைவர் எஸ். ரமேஷ் லால் அவர்களின் முன்னிலையில்கொரோனா பாதிப்பின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்காக பெரும் பாடுபட்டு உழைத்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் விதமாக அவர்களை சிகப்பு கம்பள வரவேற்பு மற்றும் பூரண கும்ப மரியாதை வரவேற்பு செய்து முக கவசம் வழங்கி அவர்களை உற்சாகபடுத்தினர்
மேலும் முதல் கட்டமாக நலிந்த வணிகர்களுக்கு நல திட்ட உதவிகள், ஏழை எளிய மக்கள் சுமார் 150 பேருக்கு நல திட்ட உதவிகள், பத்திரிகை துறை நண்பர்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் கிராம நிருவாக அதிகாரி கலந்து கொண்டு பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருற்களை வழங்கினர்.