சிறப்பு ஆன்லைன் தேர்வு  கலெக்டர் கந்தசாமி ஆய்வு 

 சிறப்பு ஆன்லைன் தேர்வு  கலெக்டர் கந்தசாமி ஆய்வு 


தி.மலை மே,14- திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் படி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற் காக கடந்த மார்ச் 24-ந் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப் பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.



திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கினால் வீடுகளில் இருக்கும் பள்ளி மாணவர்கள் பயனுள்ளதாக மாற்ற மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை இணைந்து தேசிய தகவலியில் தொழில்நுட்ப உதவியுடன் சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.


மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக சிறப்பு ஆன்லைன் தேர்வின் முதல்கட்ட தேர்வுகள் கடந்த ஏப்ரல் 29-ந் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் மாவட்டம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் சுமார் 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


முதல் கட்ட தேர்வில் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள 3 ஆயிரத்து 29 பள்ளி மாணவர்கள் நேரடியாக இறுதி கட்ட தேர்வுக்கு தகுதி செய்யப்பட்டு உள்ளார்கள்.


இந்த நிலையில் நேற்று 2-ம் கட்ட தேர்வு நடந்தது. இதில் பள்ளி பாடங்கள் தொடர்பான கேள்விகள் கொண்டு நடத்தப் பட்டது. அதில் அனைத்து பாடப்பிரிவிலும் மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்பட்டது. ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப் படுகிறது. ஆன்லைன் தேர்வில் பங்கேற்ற ஓவ்வொரு மாணவர் களுக்கும் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஆன்லைன் தேர்வு ஒரு மணி நேரம் நடைபெற்றது.


திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்மோகன், துணை கலெக்டர் (பயிற்சி) மந்தாகிணி ஆகியோர் உடனிருந்தனர்.


தேர்வின் முடிவுகள் உடனடி யாக வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தங்கள் வீடுகளிலும், இ-சேவை மையங்களிலும், பள்ளிகளிலும் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட சி.அரிகிருஷ்ணன்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image