நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பாக நலத்திட்ட உதவிகள்.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் தந்தை பெரியார் இளைஞர் நற்பணி சங்கம்
மற்றும் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பாக வைரஸ் தொற்றின் காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் தூய்மை காவலர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு தலா 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.