ஓஎன்ஜிசி பைப்லைன் உடைந்து கச்சாஎண்ணெய் தோட்டத்தில்
புகுந்ததால் பரபரப்பு. குடவாசல் போலீசார் விசாரணை.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் 53 சிமிழி கிராமத்தில் சங்கரன் 50
அவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது இதில் மாந்தோப்பு மற்றும்
கத்திரி தோட்டம் மிளகாய் தோட்டம் ஆகியவை பயிரிடப்பட்ட வருகிறது இந்த
நிலையில் இன்று காலை காப்பனாமங்கலம் எண்ணெய் கிணற்றிலிருந்து
கொரடாச்சேரி பகுதியில் உள்ள செட்டிசிமிலிக்கு ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய்
மூலமாக கச்சா எண்ணெய் கொண்டுசெல்லப்படுகிறது. இதில் சங்கரன் தோட்டத்தில்
குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணை தோட்டத்திற்குள் பீரிட்டு
அடித்துள்ளது.இதனால் இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக
குடவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் மேலும் குடவாசல் தீயணைப்பு
துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும்
நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். தகவலறிந்து வந்த
ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் கச்சா எண்ணெய் தற்காலிகமாக தடுத்து
நிறுத்தினர் திருவாரூர் மாவட்டத்தில் இதேபோன்று பல்வேறு பகுதியில்
எண்ணெய் குழாய் விவசாய நிலங்களில் அடிக்கடிஉடைப்பு ஏற்படுவது
குறிப்பிடத்தக்கது .
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
செய்தியாளர்,
க.பாலகுரு