நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது தேசத் துராேக வழக்கு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது தேசத் துராேக வழக்கு


 


காேவை ஷாஹின்பாக் பாேராட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது தேசத் துராேக வழக்கு பதிவு : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி கண்டனம்!*_


டெல்லியில் CAA க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள் மற்றும் வழிநடத்தியவர்கள் மீது மத்திய ஃபாசிஸ பா.ஜ.க அரசு கருப்புச் சட்டமான UAPA ன் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்ளை கைது  செய்து சிறையில் அடைத்து வருகின்றது. இதில் மூன்று மாத கர்ப்பிணியான ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவி சபுரா அவர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்போது தமிழகத்திலும் ஜனநாயக ரீதியிலான  போராட்டத்தில் பங்கேற்று பேசிய சீமான் அவர்கள் மீது தேசத் துராேக வழக்கு பாேடப்பட்டுள்ளது. மத்திய ஃபாசிஸ பா.ஜ.க அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்பட்டு வருகின்றதோ என்ற சந்தேகத்தை  இது உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.


கோவையில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ஆத்துப்பாலத்தில் பிப்ரவரி 22ம் தேதி இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உரையாற்றினார். அதில் அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து தனது பாணியில்  விமர்சனங்களை முன்வைத்தார்.


தற்பாேது இந்தப் போராட்டத்தில் பேசியது தாெடர்பாக சீமான் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோகம், விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. 


இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிப்பதாேடு, தமிழக அரசு உடனடியாக இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் காெள்கின்றேன்.


எம்.முஹம்மது சேக் அன்சாரி,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image