டாஸ்மாக் கடைகள் திறப்பு - டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை
திருப்பூர் மாவட்டத்தில் 233 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில் கொரானா தாக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் மாவட்டத்தில் 5 கடைகளை தவிர்த்து மற்ற 228 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.முன்னதாக நீல நிறத்தில் டோக்கன் வழங்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன் வீதம் மாலை 5 மணி வரை 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் டோக்கன் பெற்றவர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து மது வாங்கி சென்றனர்.
கடந்த முறை டாஸ்மாக் திறக்கப்பட்ட போது குடையுடன் வந்தால் மட்டுமே மது கிடைக்கும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இன்று கடைபிடிக்கப்படாமல் மது விற்பனை நடைபெற்று வருகிறது.மேலும் கூட்டம் அதிகம் காணப்படும் கடைகளில் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் நிலையில் மீதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களை மறுதினம் பயன்படுத்தி பெற்றுகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.