புதுச்சேரி முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட Corona கிருமி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து வினியோகிக்கப்பட்டது.
கொரானா ஒழிப்பு தொடர் மக்கள் ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கிப் போய் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ள புதுச்சேரி ஏழை தொழிலாளர்கள், அமைப்புச் சாரா தொழிலாளர் , 900 AFT, பாரதி ,சுதேசி பஞ்சாலை தொழிற்சாலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு
"வெற்றி மக்கள் இயக்கத் தலைவர் வெற்றிச்செல்வம் தலைமையில், தொடர்ந்து மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் முழுவதும் தினமும் ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, 'கோதுமை மாவு காய்கறிகள் மற்றும் ஹோமியோபதி மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் சேவைத் திட்டத்தின் தொடர்ச்சியாக முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதி விடுதலை நகர் ,
பட்டம்மாள் நகர்,
தியாகு முதலியார் நகர், நைனார் மண்டபம் வள்ளலார் நகர் பொதுமக்களுக்கும், மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் Corona கிருமி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சினிக்கும் ஆல்பம் 30 அனைத்து குடும்பங்களுக்கும்
வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் வெற்றி மக்கள் இயக்க நிர்வாகிகள் கணபதி , ஜெயப்பிரகாஷ் , மோகன் , குமரவேல், தினேஷ், புருஷோத், வாசுதேவன், அசோக்குமார் , தினேஷ்குமார் , மணி , விமல்ராஜ், சுதாகர் தியாகு முதலியார் நகர் மக்கள் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் , ஊர் பிரமுகர்கள் மற்றும் வெற்றி இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.