பண்ருட்டி அடுத்த வேலன்குப்பத்தில் தீ விபத்தில் வீடுகளை இழந்த இரண்டு குடும்பத்திற்கு தொழில்துறை அமைச்சர் சம்பத் அவர்கள் சார்பில் நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூர் ஊராட்சி வேலங்குப்பம் பாக்கியவதி க/பெ பெருமாள் மற்றும் அவரது மகன் இராஜசேகர் த/பெ பெருமாள் இவர்கள் வீடுகள் தீ விபத்து ஏற்பட்டு முழுவதுமாக சேதமடைந்ததை அடுத்து மாண்புமிகு தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களின் அறிவுருத்தலின்படியும் எம்.சி.எஸ்.பிரவின் அவர்களின் ஆலோசனையின்படியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மற்றும் நிவாரண நிதியை வழங்கி அமைச்சர் சார்பில் காடாம்புலியூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் கூட்டுறவு சங்க தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான கி.தேவநாதன், ஆறுதல் கூறினார் உடன் மாவட்ட கவுன்சிலர் G.பெருமாள், காடாம்புலியூர் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலரும் கூட்டுறவு சங்க தலைவருமான A.G.கல்யாணசுந்தரம், ஊராட்சி கழக செயலாளர் T.சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் MRK.முருகன், முன்னாள் கவுன்சிலர் இந்திரா வடிவேல், SPCID பலராமன், கிளைகழக செயலாளர் R.சிவக்குமார், R.தமிழ்அரசன், ஆகியோர் இருந்தனர்.