ஆட்டோத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

  ஆட்டோத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு
 நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
 
  
 ஆட்டோத் தொழிலாளர்கள் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு திருவாரூரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
 
 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் ஆட்டோத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் மற்றும் எல்ஐசி ஊழியர் சங்கம் இணைந்து திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஆட்டோத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 100 பேருக்கு பத்து கிலோ அரிசி, ரூபாய் 300 மதிப்பிலான பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், ரூபாய் 150 மதிப்பிலான காய்கறிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சித்தமருத்துவர் டாக்டர் எஸ்.சரண்யாதேவி கலந்துகொண்டு பயனாளிகள் அனைவருக்கும் கபசுர குடிநீர் மருந்தினை வழங்கி, கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென விளக்கி கூறினார். ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் வி.ஈஸ்வரமூர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தினை அனைவருக்கும் வழங்கினார்.
 


 நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் எம்.சௌந்தரராஜன் மற்றும் ஊழியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் ட்டி.ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனிவேலு, எல்ஐசி ஊழியர் சங்க முன்னனித் தலைவர் தெட்சிணாமூர்த்தி, கோட்டச் சங்க இணைச்செயலாளர் எஸ்.செந்தில்குமார், கிளைச் சங்கச் செயலாளர் கமலவடிவேலு, தலைவர் நிதிஷ் சண்முகசுந்தர், கோபாலகிருஷ்ணன், பள்ளியின் தாளாளர்  முரளிதரன், முடிதிருத்தும் தொழிலாளர் சங்க தலைவர் மதி, மகளிர் தோழியர் வாசுகி, லதா மற்றும் ஏராளமான கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள், எல்ஐசி ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
 திருவாரூரில் ஆட்டோத் தொழிலாளர்கள் மற்றும் முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. செய்தியாளர் க.பாலகுரு


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image