ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் : ஜனநாய மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் : ஜனநாய மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்



 


ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது* கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நான்காவது கட்டமாக மே 31 வரையிலும் மத்திய, மாநில அரசுகள் அமல் படுத்தியது .மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் போட பட்ட கட்டுப்பாடுகள் எல்லாமே சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பலரது வாழ்வாதாரத்தில் சின்ன சின்ன மாற்றங்களும் ஏற்பட்டு வருமான தேவையிலும் ஒரு சில மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடதக்கது . மேலும் ஊரடங்கும் உத்தரவினால் ஆட்டோ தொழில் முற்றிலும் முடக்கியுள்ளது இதனால் ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளாதாரம் நெருக்கடியில் பெரிதும் பாதிக்க பட்டு உள்ளனர் . தமிழகத்தில் படிப்படியாக மக்களின் தேவைகளையும் தின கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு ஒரு சில மாவட்டங்களில் தளர்வுகளை ஏற்படுத்திய தமிழக அரசு ஆட்டோக்களை மட்டும் இயக்க அனுமதிக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது . மேலும் தமிழக முழுவதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தின் ஏழ்மை நிலைமையை தமிழக அரசு கருத்தில் கொண்டு ஆட்டோ இயக்க வதற்கு பரிசிலியனை செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . எனவே : வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு உரிய நிபந்தைனைகளுடன் ஆட்டோகளை இயக்கவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image