அரியலூர் மாவட்டத்தை கைகழுவுகிறதா எடப்பாடி அரசாங்கம்? எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
கை கழுவுங்கள், என்று விளம்பரம் செய்த எடப்பாடி அரசு, அரியலூர் மாவட்ட மக்களை கைகழுவி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிக்கப்பட்டோர் பட்டியலில் அரியலூர் மாவட்டம் சென்னைக்கு அடுத்த இடத்தை பிடித்து, இரண்டாவது இடத்தில் இருப்பதை பார்த்து, வெளியூர் நண்பர்கள் தொடர்ந்து விசாரித்த வண்ணம் உள்ளார்கள். உள்ளூரில் எல்லோரும் பதட்டத்தோடு உள்ளார்கள்.அரியலூர் மாவட்ட மக்களை எடப்பாடி அரசாங்கம் கைகழுவி விட்டதாக தெரிவித்துள்ளார்.