கலசப்பாக்கம் அடுத்த அம்மாபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 860 தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார். May 19, 2020 • M.SENTHIL கலசப்பாக்கம் அடுத்த அம்மாபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 860 தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபாளையம், மேல் முடியனுர், முத்தனூர், கொட்டகுலம், மேல் பெண்ணாத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்கள், கோவில் அர்ச்சகர்கள், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாய பெருங்குடி மக்கள் என பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரானா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் பாதிக்காத வகையில் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அப்பகுதியில் வசிக்கும் 860 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதனை பொதுமக்கள் அரசு பின்பற்றிய சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கலசப்பாக்கம் செய்தியாளர் கிருபாகரன்.