மதுக்கடையை மூட வேண்டும் என அதிமுக அரசை கண்டித்து மே 7ம் தேதி திமுக சார்பில் திண்டுக்கல் பாறைபட்டி 40-வது வார்டு நகர நெசவாளர் துணை அமைப்பாளர் எம் .ஆர். எஸ். பாண்டி குடும்பத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கொரோனாவை வைரஸை கட்டுப்படுத்துவதில் அலட்சியமும் , மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமும் காட்டும் அதிமுக அரசை கண்டித்து மே 7ம் தேதி திமுக சார்பில் திண்டுக்கல் பாறை பட்டி 40-வது வார்டு நகர நெசவாளர் துணை அமைப்பாளர் எம் .ஆர். எஸ். பாண்டி குடும்பத்தினர் வீட்டின் முன்பு டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன்பு அட்டையில் மதுக்கடையை மூடிவிடு , தமிழர்களை வாழவிடு என்ற வாசகத்தினை கட்டியும் , கருப்பு சட்டை அணிந்தும் , கருப்புக்கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் பா. தருண் , பா. தமிழ்பிரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.