திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சிபோலீசார் விசாரணை May 18, 2020 • M.SENTHIL திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. போலீசார் விசாரணை. திருப்பூர் - கொடிகம்பம் பகுதியில் டாடா இண்டிகேஷ் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் இரண்டு பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பொழுது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பது கண்டு திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்த போது அதில் ஒரு இயந்திரம் கம்பியை கொண்டு உடைக்க முயற்சித்திருப்பது தெரிய வந்தது. ஆனால் பணம் எதுவும் திருடு போகவில்லை. மேலும் அருகில் இருந்த ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது. போலீசார் அங்கும் ஆய்வு செய்தனர். அதில் எதுவும் கொள்ளை முயற்சி நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர். ஏடிஎம் மையங்கள் அருகே டாஸ்மாக் கடை உள்ளதால் மதுபோதையில் எதுவும் இந்த மர்மநபர்கள் எதுவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனரா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.