திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனோ தொற்று இல்லை. இதுவரை 29 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று 16 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். மீதமுள்ள 13 நபர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனோ தொற்று இல்லை. இதுவரை 29 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று 16 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். மீதமுள்ள 13 நபர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என அமைச்சர் காமராஜ் கூறினார்.



தூய்மை பாரத திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி நகராட்சியில் கொரோனோ நோய் தடுப்புபணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு  22.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 4  வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளகளிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது,
உழைக்கும் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனோ தொற்று இல்லை. இதுவரை 29 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று 16 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். மீதமுள்ள 13 நபர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர். பிரதமர் மற்றும் முதல்வரின் நடவடிக்கைகளால் கொரொனா பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத விலையில்லா ரேஷன் பொருட்கள் மற்றும் ஊரடங்கு உதவித்தொகை 1000 ரூபாய் பணம் 98 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது, இதுவரை வாங்கதவர்கள் அந்த அந்த பகுதி ரேஷன்கடைகளில் பெற்று கொள்ளலாம்.
மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருடகள் டோக்கன் நாளை (2ம் தேதி) மற்றும் 3ம் தேதிகளில் வழங்கப்பட்டு அதற்கான பொருட்கள் வரும் 4ம் தேதி முதல் தினம்தோறும்  150 பேர் வீதம் சுழற்ச்சி முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 
பின்னர் மன்னார்குடி காமாட்சியம்மன் கோவில் தெரு, ஆசாத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300க்கு மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணபொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image