திண்டுக்கல் அசனாத்புரத்தில் மூன்றாவதுமுறையாக ஏழை , எளிய மக்கள் 500 குடும்பங்களுக்கு அரிசியை சமூக ஆர்வலர் யு.மரைக்காயர் வழங்கினார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலையின்றி பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து ஏழ்மையில் இருக்கும் ஏழை , எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் மிகவும் சிரம்ப்பட்டு வந்ததை அறிந்து திண்டுக்கல் அசனாத்புரத்தில் இருக்கும் சமூக ஆர்வலர் யு.மரைக்காயர் தலைமையில் நிவாரணப் பொருட்களை திண்டுக்கல் அசனாத்புரத்தில் மூன்றாவது முறையாக ஏழை , எளிய மக்கள் சுமார் 500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசியை சமூக ஆர்வலர் யு.மரைக்காயர் வழங்கினார். இதில் திண்டுக்கல் அசனாத்புரம் சமூக ஆர்வலர் யு. மரைக்காயர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாங்கள் எங்கள் பகுதியான அசனாத்புரத்தில் முதல்முறையாக 1000 குடும்பங்களுக்கு அரிசியை வழங்கினோம். அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 1000 குடும்பங்களுக்கு மீண்டும் அரிசியை வழங்கினோம். இன்று மீண்டும் மூன்றாவது முறையாக 500 குடும்பங்களுக்கு அரிசியை வழங்கி உள்ளோம். இதுவரை மொத்தம் 2500 குடும்பங்களுக்கு அரிசியை வழங்கியுள்ளோம். நாங்கள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக சாதி , மத பாகுபாடியின்றி மும்மதத்தை சார்ந்த ஏழை , எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றோம். இது விளம்பரத்திற்காக நாங்கள் செய்யவில்லை. எங்களைப் போன்று அந்தந்தப் பகுதியில் இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் நாங்கள் எங்களுடைய கருத்தை இந்த நேரத்தில் பதிவு செய்கிறோம். மேலும் இந்த உதவி யாருக்கு போய் சேர வேண்டும் என்றால் கணவனை இழந்த விதவைகள் , பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் , கை , கால் , ஊனமுற்றவர்கள் அவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் கொடுத்து வருகின்றோம். நிவாரணம் கொடுப்பவர்களும் இது மாதிரியான ஆட்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டுமென அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
.மாவட்ட நிருபர்: பி.இப்ராகிம்கான் திண்டுக்கல் செல் : 98421 61786