கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகர அதிமுக சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி May 20, 2020 • M.SENTHIL கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகர அதிமுக சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்துக்உட்பட்ட திருவதிகை 15வது வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று அமைச்சர் எம்,சி, சம்பத் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தல்படி அதிமுக 15வது வார்டு செயலாளர் முருகையன் தலைமையில் அப்பகுதியில் உள்ள கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 500 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் ஆகியவை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது இதில் நகர செயலாளர் தாடிமுருகன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலு நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கார்த்திக், மற்றும் செந்தில் முருகன் ,அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..