தமிழ் மாநில நாயுடு பேரவை ( அனைத்து நாயுடு நாயக்கர் கூட்டமைப்பு ) சார்பாக கடலூர் நகரத்தில் வறுமையில் வாழும் ஏழை , எளிய பொதுமக்கள் 50 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
தமிழ் மாநில நாயுடு பேரவை ( அனைத்து நாயுடு நாயக்கர் கூட்டமைப்பு ) தமிழ் மாநில நாயுடு பேரவை மாநில தலைவர் என். கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின் பெயரில் கடலூர் மாவட்டம் சார்பாக கடலூர் நகரத்தில் வறுமையில் வாழும் ஏழை , எளிய பொதுமக்கள் 50 குடும்பங்களுக்கு அரிசி , காய்கறிகள் மற்றும் சோப்பு , சேமியா பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் நாயுடு , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத்கண்ணன் , மாவட்ட பொருளாளர் சிவராஜ் , மாவட்ட இளைஞரணி தலைவர் தாமோதர கண்ணன் , நகர நிர்வாகிகள் முரளி , குமார் , கோபி , சீனி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.