திருப்பூரில் டேங்கர் லாரியில் கஞ்சா விற்ற மூவர் கைது. 5 கிலோ கஞ்சா, டேங்கர் லாரி, இருசக்கர வாகனம் பறிமுதல்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது தனியார் தண்ணீர் டேங்கர் லாரியில் வைத்து கஞ்சா கடத்திய சுந்தர மகாலிங்கம், முகமது யாசின், பாண்டி பிரபு என்ற மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவையும் அதனை கடத்த பயன்படுத்திய தண்ணீர் டேங்கர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.