இந்த ஆண்டிற்கான குடிமராமத்து பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி ...
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தொழில் நலிவு பெற்றுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், நாவிதர்கள் ,சலவைத் தொழிலாளர்கள், அர்ச்சகர்கள்,திருநங்கைகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை திருவாரூர் மாவட்ட
அதிமுக சரர்பில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது....
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 29 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் மூன்று பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான குடிமராமத்து பணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான டெண்டர்கள் நாளை முதல் கோரப்படவுள்ளது.
இதுவரை நெல் கொள்முதல் ஆனது தமிழகத்தில் 22 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது, இந்த பருவம் முடிவதற்குள் அது 28 லட்சம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்...
இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி,மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர். செய்தியாளர் க.பாலா