திருப்பூரில் நடிகர் அஜீத் குமாரின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் 50 பேர் ரத்ததானம்.
திருப்பூரில் நடிகர் அஜீத் குமாரின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. நடிகர் அஜீத் குமாரின் 49 வது பிறந்த நாளான இன்று அஜீத் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் அதன் தலைவர் வாத்தியார் ரமேஸ் தலைமையில் எளிமையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக புக்ஷ்பா தியேட்டர் சந்திப்பு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 50 திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். பின்னர் ஆண்டிபாளையம் மற்றும் நல்லூர் பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இந்நிகழ்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.