திருப்பூரில் அறம் மக்கள் நலச்சங்கம் நிறுவன தலைவர் சு. ராஜா அவர்களின் 47 வது பிறந்தநாள் விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா 5000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
திருப்பூரில் அறம் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் சு. ராஜா அவர்களின் 47 வது பிறந்தநாள் விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. சங்கத்தின் மாநில இளைஞர் அணி தலைவர் ஜே.ஜே. ராம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் துவக்க நிகழ்சியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் 5000 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் ஒருவாரம் நடைபெறும் இவ்விழாவில் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதிலும் 2 லட்சம் பேருக்கும், திருப்பூரில் 8 ஆயிரம் பேருக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்சியில் தெற்கு மாவட்ட தலைவர் எட்வின் பிரபாகரன், வடக்கு மாவட்ட தலைவர் முத்து, துணைத்தலைவர் ஈஸ்வரன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கரிகாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மாநில இளைஞரணி தலைவர் ஜே.ஜே.ராம், அறம் மக்கள் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தற்போது நிவாரணம் வழங்கப்பட்டுவருவதாகவும், உதவி தேவைப்படுவோர் சங்கத்தை தொடர்புகொண்டால் உடனடியாக உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.