டாக்டர்.ஆர்எம்ஆர் அவர்களின் சார்பாக அரங்கூர் கிராமத்தில் வசிக்கும் குடுகுடுப்ப காட்டு நாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரங்கூர் கிராமத்தில் வசிக்கும் குடுகுடுப்ப காட்டு நாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு டாக்டர்.ஆர்எம்ஆர் அவர்களின் ஆணைக்கிணங்க ஆர்எம்ஆர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களான தமிழ் மாநில நாயுடு பேரவை மாநில தலைவர் லயன்ஸ் . என்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் , தமிழக நாயுடு நாயக்கர் பேரவை மாநில தலைவர் சேலம் ஆர்.கே.ஜெயக்குமார் அவர்களும் , விடுதலை களம் கொ.நாகராஜன் அவர்களும் , நாயக்கர் நாயுடு பேரவை மாநில தலைவர் மெய்.தனபாலன் அவர்களும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் தலைவர் பெ.தேக்கமலை ஆகியோர் கலந்து கொண்டு 5 கிலோ அரிசியை கொரோனா நிவாரணமாக வழங்கினார்கள். மேலும் இக்குழுவானது பல ஆண்டுகள் கோரிக்கையான காட்டு நாயக்கன் சமுதாயத்திற்கு எஸ்.டி. சாதி சான்றிதழ் பெற்று தர தலைவர் ஆர்எம்ஆர் அவர்களுக்கு பரிந்துரை செய்தனர்.