நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவாரூர் மாவட்டத்திற்கு வழங்கினார் .
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் மேலும் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்காக நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாயை திருவாரூர் மாவட்டத்திற்காக மார்ச் 26ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் வழங்கினார்.
இந்நிலையில் இந்த தொகை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகள் ,கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் ,கையுறைகள் உள்ளிட்ட 14 வகையான உபகரணங்களையும் இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் விஜயகுமார் அவர்களிடம் பயன்பாட்டிற்காக நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்.மற்றும் ஒரு வெண்டிலட்டர் திருவாரூர் விஜயபுரம் தாய் சேய் மருத்துவமனைக்கு வழங்கி உள்ளார் என்பத குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் க.பாலா