சாணார்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பைபட்டி ஊராட்சியில் 30 மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி , பருப்பு , காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாமல் இருக்கும் சூழ்நிலையால் மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளனர் இவர்களுடைய நலன் கருதி திமுக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட சாணார்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பைபட்டியில் உள்ள 30 மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி , பருப்பு , காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை நத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் , மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்து அனுப்பினர். இதனை கோம்பைபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து 30 மாற்றுதிறனாளிகளுக்கு கோம்பைபட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திக்கைசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.