கடலூரில் உள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் 3.50 லட்சம் கொரோனா நிவாரண உதவியை வழங்கினார்.
கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் கூத்தப்பாக்கம் பாதிரிக்குப்பம் முதுநகர் என பல்வேறு பகுதியைச் சேர்ந்த வேன் கார் டூரிஸ்ட் வேன் மினி லாரி டிப்பர் லாரி ஓட்டுநர்கள் பலபேர் கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே உள்ள நிலையில் தன் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதன் காரணமாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ அறிவுரையின் பேரில் கடலூரில் ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாடகை கார், வேன் , மினி லாரி டிரைவர்கள் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் சுமார் 3.50 இலட்சம் செலவில் நலதிட்ட உதவிகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் திமுக அவைத்தலைவர் தங்கராசு நகர செயலாளர் ராஜா கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன்,லட்சுமி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர்,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன் வழக்கறிஞர் பிரிவு கதிரவன், முகுந்தன், வினோத்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கடலூரில் உள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் 3.50 லட்சம் கொரோனா நிவாரண உதவியை வழங்கினார்.