என்.எல்.சி. நிறுவனத்தினால் நிலத்தடிநீர் ஆதாரம் இழந்து தவிக்கும் பண்ருட்டி பகுதி கிராமபுற மக்களுக்கு உதவ வி.எம்.அறக்கட்டளை. சார்பில் ரூ 25 லட்சம் வழங்கதயார் . May 18, 2020 • M.SENTHIL என்.எல்.சி. நிறுவனத்தினால் நிலத்தடிநீர் ஆதாரம் இழந்து தவிக்கும் பண்ருட்டி பகுதி கிராமபுற மக்களுக்கு உதவ வி.எம்.அறக்கட்டளை. சார்பில் ரூ 25 லட்சம் வழங்கதயார் மருங்கூர் வி.எம்.அறக்கட்டளை நிறுவன தலைவர் வீரவிஸ்வாமித்திரன் பேட்டி. மருங்கூர் வி.எம்.அறக்கட்டளை நிறுவன தலைவர் வீரவிஸ்வாமித்திரன் நிருபர்களிடம்கூறியதாவது: மத்திய அரசின் மிகபெரியபொது துறைநிறுவனமான என்.எல்.சி நிறுவனம் கொரோனாபரவலால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளியகுடும்பங் களுக்குபசிபிணிபோக்க தேவையான நிவாரணம் வழங்கி உதவவேண்டும் என்றுகோரியிருந்தோம். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டும்ரூபாய்1.25கோடி செலவில் 25ஆயிரம் குடும்பத்திற்குஉதவி பொருள்கள்வழங்கப் பட்டுள்ளது. இதேபோலபண்ருட்டி ஒன்றியபகுதியில் என்.எல்.சி.நிறுவனத் தால் பாதிக்கப்பட்டு குடிநீர்தட்டுபாடு ஏற்பட்டுள்ள100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளமேலும்25ஆயிரம் குடும்பத்திற்குஅவசர தேவையாகஉடனடியாக நிவாரணம்வழங்க வேண்டும். இதற்காகஎங்களது அறக்கட்டளைதனது பங்களிப்பாக ரூ25லட்சம் என்.எல்.சி.நிறுவனத்திற்குவழங்கதயார். இதனைபெற்றுக் கொண்டுதகுதியான ஏழைகுடும்பங்களுக்கு என்.எல்.சி. மூலம்நிவாரணம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர்அந்த அறிக்கையில்கூறியுள்ளார்.