பண்ருட்டிசட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தலைமையில்2000 குடும்பத்தினருக்கு சொந்த செலவில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது
பண்ருட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் சொந்த செலவில் கொரோனா நிவாரணம் ஆட்டோ, கார் ,வேன், சலவைத் தொழிலாளர், முடிதிருத்துவோர், கட்டுமன தொழிலாளர்கள், வீடு மனை நிலம் விற்பனை முகவர்கள்,உட்பட்ட 2000 குடும்பத்தினருக்கு
அரிசி காய்கறிகள் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையில்
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்
K.A . பாண்டியன்
கலந்துகொண்டு
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 2000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.