திருப்பூர் அருகே மது கிடைக்காததால் சாராயம் காய்ச்சிய உணவக உரிமையாளர் கைது. அவரிடமிருந்து 20 லிட்டர் சாராய ஊரல் கீழே ஊற்றி அழிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் சாராயம் காய்ச்ச படுவதாக எழுந்த புகாரையடுத்து ஊத்துக்குளி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உப்பிலியன்காட்டுத்தோடட்ம் பகுதியில் ஓட்டல் உரிமையாளர் பூவேந்தன் (43) என்பவர் சாராயம் காய்ச்சி வருவது கண்டறியப்பட்டது இதனையடுத்து ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீசார் பூவேந்தன் தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் 2 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊறல் கண்டறியப்பட்டு ஊற்றி அழிக்கப்பட்டது. உணவக உரிமையாளரான பூவேந்தன் ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்காமல் திண்டாடி வந்துள்ளார். இதனால் தனக்கு சொந்தமான நிலத்திலேயே சாராயம் காய்ச்ச முயன்று சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.