தேனி மாவட்டத்தில் 180 கிலோ கஞ்சா கடத்தியதாக 5 பேர் கைது May 20, 2020 • M.SENTHIL தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி உத்தமபாளையம் காவல் கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு,கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலை மணி மற்றும் போலீசார் உத்தமபாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் வாகனத்தில் இருந்த 180 கிலோ கஞ்சாவையும்,வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.வாகனத்தில் வந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த சுகப்பிரியா (30) முத்துச்செல்வன் (28) சந்தோஷ் (27) மற்றும் கம்பம் நகரைச் சேர்ந்த சுவாதி (34) ஈஸ்வரி (45) என்பது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கொண்டுவந்து கம்பம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதும் தற்பொழுது வாகன போக்குவரத்து தொடங்கியதால் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை எடுத்துச் சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட செய்திகளுக்காக க.சின்னதாஸ்