திண்டிவனம் 18 வது வார்டில் அமைச்சர் சி.வி. சண்முகம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
திண்டிவனம் மே 16
திண்டிவனம் 18வது வார்டு மாரிஅம்மன் கோவில் பகுதியில் 600க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு திண்டிவனம் முன்னாள் நகரமன்ற தலைவர் கே. வி.என்.வெங்கடேசன் ஏற்பாட்டில் அவர்களது குடும்பங்களுக்கு அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சேகர்,நகர அவைத்தலைவர் மணிமாறன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், முரளி, தாஸ், அம்மா பேரவை நிர்வாகிகள் பாலாஜி, சங்கர், நவீன்,ராஜா,
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ச.சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்