பாட்டி வீட்டிற்கு சென்ற 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு. நன்னிலம் போலீசார் விசாரணை.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார் (45)இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் .
இந்த நிலையில் அவரது மகள் மௌனிகா (17 )பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ள நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் அருகே இருந்த அதே தெருவில் வசிக்கும் பாட்டி வீட்டிற்கு உறங்க சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அப்பகுதி மக்கள் அருகே உள்ள வயல் வேலைக்கு சென்ற போது அங்கு காயத்துடன் மௌனிகா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மெளனிகாவின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. திருவாரூரிலிருந்து செய்தியாளர் க.பாலா