150 தொழிலாளர் குடும்பங்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் A.நடராஜன் அவர்கள் தனது சொந்த நிதியின் மூலம் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பல்லடம் நகர் பகுதியில் கொரானா வைரஸ்காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட ஆட்டோ ஓட்டும் 150 தொழிலாளர் குடும்பங்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கரைப்புதூர் A.நடராஜன் MLA அவர்கள் தனது சொந்த நிதியின் மூலம் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார் இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் கணேசன், பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல், பொறியாளர் சங்கர், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் A.சித்துராஜ், உழவர் பணி கூட்டுறவு சங்கத்தலைவர் AM.ராமமூர்த்தி, வைஸ் பழனிச்சாமி, தர்மராஜன், தங்கவேல், தமிழ்நாடு பழனிச்சாமி, விக்னேஷ், பணப் பாளையம் லட்சுமணன், வெண்ணெய் சுப்பிரமணியம், யவன கதிரவன், ஞானாம்பிகை, செல்வி, வனஜா, மற்றும் கழக நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு கலந்துகொண்டனர்