கடலூரில் டாஸ்மாக் கடைகளில் கலர் ஜெராக்ஸ் டோக்கன் அச்சடித்து மது வாங்க வந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் கைது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முலுவதும் 144 தடைபிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய கடைகளைத் தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்தது தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எந்த தடையுமில்லை என தெரிவித்த பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டது.
இதை தொடர்ந்து
கடலூரில் காலை 7 மணி மது பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர்.அவர்களுக்கு டாஸ்மாக் கடையின் சார்பாக 500 டோக்கன்கள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து அடுத்து சில மது பிரியர்கள் போலி டோக்கன்கள்(கலர் ஜெராக்ஸ் ) அச்சடித்து மது வாங்க வந்தனர் இதனை அறிந்த காவல்துறையினர் 15க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து எங்கு அச்சு அடித்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.